/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விரைவில் கட்சி துவக்கம்.. 30 தொகுதிகளில் போட்டி: ஜோஸ் சார்லஸ் மார்டின் தகவல்
/
விரைவில் கட்சி துவக்கம்.. 30 தொகுதிகளில் போட்டி: ஜோஸ் சார்லஸ் மார்டின் தகவல்
விரைவில் கட்சி துவக்கம்.. 30 தொகுதிகளில் போட்டி: ஜோஸ் சார்லஸ் மார்டின் தகவல்
விரைவில் கட்சி துவக்கம்.. 30 தொகுதிகளில் போட்டி: ஜோஸ் சார்லஸ் மார்டின் தகவல்
ADDED : அக் 28, 2025 06:16 AM
புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த பட்டானுாரில் நடந்த விருதுகள் வழங்கும் விழாவில் ஜே.சி.எம்., மக்கள் மன்ற நிறுவனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நிருபர்களிடம் கூறியதாவது:
நான் எந்த ஒரு கட்சிக்கும் 'பி'அணி கிடையாது. நான் மக்களின் அணி. மக்களுக்காக பணி செய்ய வந்துள்ளேன். மக்களுக்காக நல்லது செய்ய வரும்போது சில அரசியல்வாதிகள் குறை சொல்வர். முன்னாள் முதல்வர் நாராயணசாமி பல இடங்களில் சொத்து வாங்கி போட்டுள்ளார். அதற்கு எந்த வழியில் வருமானம் வந்தது என்பது தெரியவில்லை.
காங்., ஆட்சி செயல்பாடுகளை பார்த்து மக்கள் இரண்டு இடங்களை மட்டுமே தந்துள்ளனர். இதில் இருந்தே அவர்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஜே.சி.எம்., 15 தொகுதிகளில் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம். விரைவில் மற்ற தொகுதிகளில் விரிவுபடுத்த உள்ளோம். விரைவில் புதிதாக கட்சி துவங்கி, 30 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான வேலைகளை செய்து வருகிறோம்.
புதுச்சேரியில் நடந்து வரும் கொலைகளால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், என்னை புதுச்சேரிக்கு அனுப்பவே குடும்பத்தார் அச்சப்படுகின்றனர். இருப்பினும் மக்களுக்காக வருகிறேன்.
மக்களை ஏமாற்றுபவர்கள், எங்களைப் போன்ற தொழில் அதிபர்கள் சமூக சேவை செய்ய வந்தால், சம்பாதிப்பதற்கு வழி இல்லாமல் செய்துவிடுவோம் என்று பயப்படுகின்றனர். அதன் வெளிப்பாடுதான் எங்களை குறை கூறுவது.
முதல்வர் ரங்கசாமி மீது எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை. மக்கள் தான் அவர் இதுவரையும் எதுவும் செய்யவில்லை என்ற அதிருப்தியில் இருக்கின்றனர். எனக்கு தனிப்பட்ட முறையில் யார் மீதும் எந்த பகையும் இல்லை.
நான் யாரிடமும் எந்த ரகசிய பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை. புதிய சிந்தனை உடையவர்கள், எங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பி வருகின்றனர். தீபாவளி பரிசு அனைத்து தொகுதிக்கும் கொடுத்தேன். யாரையும் என்னிடம் இழுப்பதற்காக இல்லை. நான் யாரையும் குறிப்பிட்டு வழங்கவில்லை. பொதுவாகத்தான் வழங்கினேன்.
அரசியல்வாதிகள் எளிமை என கூறிகொண்டு, 25 ஆண்டுகளாக டீ கடையில் உட்கார்ந்து என்ன பயன், தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மக்களுக்கு சேவை ஆற்ற வேண்டும். மக்களுடன் இருப்பதை விட மக்களுக்காக இருக்க வேண்டும்' என்றார்.

