/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இன்று முதல் பணிக்கு திரும்பும் பாசிக் ஊழியர்கள்
/
இன்று முதல் பணிக்கு திரும்பும் பாசிக் ஊழியர்கள்
ADDED : ஜன 27, 2025 05:09 AM
புதுச்சேரி : பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்க செயலாளர் முத்துராமன் அறிக்கை:
பாசிக் நிறுவனத்தில் பணி புரியும் நிரந்தர ஊழியர்கள், எப்.டி.சி.எல்., ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும். எப்.டி.சி.எல்., ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 6வது ஊதியக்குழு பரிந்துரையின் ஊதிய நிலுவைகளை வழங்க வேண்டும் என கடந்த 17.04.2023 முதல் சட்ட ரீதியாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர்.
முதல்வர், துறை அமைச்சரிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து போராட்டத்தை திரும்பெறுவது மூலமாவது அரசு எங்களை அழைத்து பிரச்னைகளை தீர்க்க வேண்டும். அதனால் இன்று 27ம் தேதி முதல் ஊழியர்கள் பணிக்கு திரும்ப செல்ல உள்ளனர்.