/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கதிர்காமம் மருத்துவமனை வளாகத்தில் திரியும் நாய்கள் நோயாளிகள் அச்சம்

ADDED : நவ 02, 2024 06:17 AM
புதுச்சேரி: கதிர்காமம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும்.
புதுச்சேரி அரசின் காமராஜர் மருத்துவ கல்விச்சங்கம் மூலம் கதிர்காமத்தில் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு, தினந்தோறும் நுாற்றுக்கணக்கான நோயாளிகள் வெளிபுற சிகிச்சைக்கும், உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இங்குள்ள அவசர சிகிச்சை பிரிவு மற்றும் வெளிப்புற சிகிச்சை பதிவு அட்டை பெறும் வளாகம் பகுதியில் 5க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உலா வருகிறது.
விபத்துக்களில் சிக்கி காயத்துடன் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் நாய் கடித்து விடுமோ என்ற அச்சத்துடன் கடந்த செல்கின்றனர்.
தெரு நாய் கடித்து சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், மருத்துவமனையில் உள்ள நாய்களை பார்த்து அச்சம் அடைகின்றனர். எனவே, மருத்துவமனை வளாகத்தில் திரியும் நாய்களை அப்புறப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.