ADDED : நவ 26, 2026 08:23 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையுடன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை இணைந்து, காட்டேரிக்குப்பம் மற்றும் சுத்துக்கேணி உழவர் உதவியகத்தில், பி.எம். கிசான் திட்டத்தில், பட்டா இல்லாத விவசாயிகளுக்கு பட்டா மாற்றுவதற்கான சிறப்பு முகாமை இன்று (நவ.,26) நடத்தின.
முகாமில், காட்டேரிக்குப்பம், சந்தைபுதுக்குப்பம், சுத்துக்கேணி, கொடாத்துார், தேத்தம்பாக்கம் ஆகிய கிராமங்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று, பட்டா மாற்றுவதற்கான விண்ணப்பங்களை வழங்கினர்.
முகாமில், வேளாண் அலுவலர் வெங்கடாசலம், உதவி வேளாண் அலுவலர் கண்ணாயிரம், கிராம விரிவாக்க பணியாளர் ஆதிரையன், ஏழுமலை, சிவானந்தம், வருவாய்த் துறை அதிகாரி ஏழுமலை, கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
