தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பட்டா மாற்றம்! நில அளவை பணிகள் இனி எளிதாகும்: உரிமம் பெற்ற சர்வேயர்கள் களத்தில்

பட்டா மாற்றம்! நில அளவை பணிகள் இனி எளிதாகும்: உரிமம் பெற்ற சர்வேயர்கள் களத்தில்

பட்டா மாற்றம்! நில அளவை பணிகள் இனி எளிதாகும்: உரிமம் பெற்ற சர்வேயர்கள் களத்தில்


UPDATED : நவ 18, 2026 10:45 PM

ADDED : நவ 18, 2026 09:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 10:45 PM ADDED : நவ 18, 2026 09:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பட்டா மாற்றம் உள்ளிட்ட நில அளவைப் பணிகளை விரைவுபடுத்தும் வகையில், புதுச்சேரியில் உரிமம் பெற்ற நில அளவையாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

பொதுவாக நிலம் வாங்குவது, விற்பது, நிலத்தின் எல்லைகளை உறுதி செய்வது எனப் பல்வேறு தேவைகளுக்கு நில அளவை மிகவும் அவசியமாக உள்ளது. நிலத்தின் எல்லைகள் தொடர்பாக ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்கவும், உரிமையாளர்களின் சொத்து உரிமையை உறுதிப்படுத்தவும் துல்லியமான நில அளவீடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இதை கருத்தில் கொண்டு, நில அளவைப் பணிகளை நவீனப்படுத்தவும், பொதுமக்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப சேவைகளை மேம்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, உரிமம் பெற்ற நில அளவையாளர்களை நில அளவைத் துறை தற்போது பணியில் ஈடுபடுத்தியுள்ளது. மேலும், உரிமம் பெற்ற நில அளவையாளர்கள் மற்றும் நில வரைபட வரைவாளர்கள் குறித்த விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

உரிமம் பெற்ற நில அளவையாளர்கள் மற்றும் நில வரைபட வரைவாளர்கள் தங்களது பணிகளை முறையான பதிவேடுகள் மற்றும் ஆவணங்களுடன் மேற்கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. நில அளவைப் பணிகளின்போது அரசு நிர்ணயித்துள்ள நடைமுறைகள் மற்றும் கட்டண விதிமுறைகளைத் தவறாமல் பின்பற்றுவதுடன், பொதுமக்களுக்கு உரிய காலத்தில் சேவைகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட தேவைகளுக்கும், அரசு நிறுவனங்கள் தங்களது திட்டப் பணிகளுக்கும் உரிமம் பெற்ற நில அளவையாளர்கள் மற்றும் வரைபட வரைவாளர்களின் சேவைகளை நேரடியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

எப்படி அணுக வேண்டும்?

பட்டா மாற்றம் கோரி ஏற்கனவே தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ள பொதுமக்கள், உரிமம் பெற்ற சர்வேயரின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் அதற்கென மனு அளிக்கலாம்.

அந்த மனுவில், உரிமம் பெற்ற சர்வேயரைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவதாகக் குறிப்பிட்டு, தங்களது விண்ணப்பத்தை அவருக்கு அனுப்பி வைக்குமாறு கோரலாம்.

அதன்படி, நில அளவை விண்ணப்பம் உரிமம் பெற்ற சர்வேயருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, நில அளவைப் பணிகளை மேற்கொள்ள வழிவகை செய்யப்படும்.

சில நேரங்களில் பொதுமக்களுக்கு பட்டா மாற்றம் போன்ற அரசுப் பணிகள் அல்லாமல், தனிப்பட்ட சொத்து தொடர்பான நில அளவைத் தேவைகளும் ஏற்படுகின்றன.

உதாரணமாக, அண்ணன்-தம்பி இடையே சொத்துப் பிரச்னை ஏற்படும்போது, நிலத்தைத் துல்லியமாக அளந்து எல்லைகளைப் பிரித்துக் கொள்வது அவசியமாகிறது. இதுபோன்ற நேரங்களில் சம்பந்தப்பட்டவர்கள் உரிமம் பெற்ற சர்வேயர்களை நேரடியாகத் தொடர்புகொண்டு, அவர்களது சேவையைப் பெற்றுக் கொள்ளலாம்.

அதேபோல், அரசு நிறுவனங்களுக்கும் இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக, உழவர்கரை நகராட்சி அல்லது பொதுப்பணித் துறை சார்பில் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்ளும்போது, அதற்கான நில அளவைப் பணிகள் அவசியமாகின்றன. இதற்காக வழக்கமான நடைமுறைகளில் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையைத் தவிர்த்து, உரிமம் பெற்ற சர்வேயர்களின் சேவையைப் பயன்படுத்தி நில அளவைப் பணிகளை விரைவாக முடித்துக் கொள்ள முடியும்.

இதனால் பட்டா மாற்றம், நிலத்தின் எல்லைகளை நிர்ணயித்தல், குடும்பச் சொத்துகளைப் பிரித்தல், சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கான நில அளவைப் பணிகளை இனி எளிதாகவும் விரைவாகவும் மேற்கொள்ள முடியும்.

பொதுமக்கள் மட்டுமின்றி அரசு நிறுவனங்களுக்கும் இந்த ஏற்பாடு உதவிகரமாக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us