/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'பட்டம் இதழால் பொது அறிவை வளர்த்துக் கொள்ள முடிகிறது' வெற்றி பெற்ற மாணவர்கள் பேட்டி
/
'பட்டம் இதழால் பொது அறிவை வளர்த்துக் கொள்ள முடிகிறது' வெற்றி பெற்ற மாணவர்கள் பேட்டி
'பட்டம் இதழால் பொது அறிவை வளர்த்துக் கொள்ள முடிகிறது' வெற்றி பெற்ற மாணவர்கள் பேட்டி
'பட்டம் இதழால் பொது அறிவை வளர்த்துக் கொள்ள முடிகிறது' வெற்றி பெற்ற மாணவர்கள் பேட்டி
UPDATED : ஜன 25, 2026 04:39 AM
ADDED : ஜன 25, 2026 04:38 AM

புதுச்சேரி: 'தினமலர்-பட்டம்' இதழால் பொது அறிவை வளர்த்துக் கொள்ள முடிகிறது என, மெகா வினாடி வினா போட்டியில் முதல் மூன்று பரிசுகளை வென்ற மாணவர்கள் கூறினர்.
முதலிடம் பிடித்த, கடலுார் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர் சஞ்சீவ்:
'தினமலர்-பட்டம்' இதழின் வினாடி வினா போட்டியில் இரண்டாம் ஆண்டாக கலந்து கொள்கிறேன். கடந்தாண்டு இறுதி சுற்றான 'பசர்' சுற்றில் வெற்றியை தவறவிட்டோம். ஆனால், இந்தாண்டு வெற்றி பெற்று, முதல் பரிசு பெற்றுள்ளோம். இந்த வெற்றி நான் பட்டம் நாளிதழை நன்றாக படித்ததால் கிடைத்தது. தினமும் பட்டம் இதழை ஒரு மணி நேரமேனும் படிப்பேன். பட்டம் இதழ் எனக்கு நிறையவே கற்றுக் கொடுத்தது.
முன்பெல்லாம் எனக்கு பொது அறிவு சார்ந்த செய்திகள் தெரியாது என, நண்பர்கள் கூறுவர். ஆனால், அதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக பட்டம் இதழ் மூலம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். அதனால் இன்று முதல் பரிசு பெற்றேன். சக மாணவர்களும் பட்டம் நாளிதழை படித்தால் அவர்களின் வெற்றிக்கு உதவியாக இருக்கும்.
மாணவர் முகமது உமர்:
நான் வெற்றி பெறுவேன் என, நம்பிய எனது பாட்டிக்கும், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன். பட்டம் இதழ் படிப்பதால் நான் நிறைய கற்றுக்கொண்டேன். பட்டம் இதழில் 2ம் பக்கத்தை விரும்பி படிப்பேன். இறுதி சுற்றில் நிறைய கேள்விகளுக்கு பதில் அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பாட புத்தகத்தை தாண்டி அதிக புத்தகங்களை படிப்பதால், பொது அறிவை வளர்த்துக் கொள்ள முடிந்தது.
இரண்டாம் இடம் பிடித்த புதுச்சேரி தேங்காய்திட்டு ஆச்சார்யா பால சிக் ஷாமந்திர் பள்ளி 8ம் வகுப்பு மாணவர் திருமாலீஸ்வரன்:
எனக்கு இது முதல் அனுபவம். முதல் முறையே இரண்டாம் இடம் பிடித்தது மகிழ்ச்சி. பட்டம் இதழ் மூலம் நிறைய பொது அறிவு விஷயங்களை கற்றுக் கொண்டேன். மேலும், நினைவாற்றலை பெருக்குவது, நேரத்தை நிர்வகிக்க கற்றுக்கொண்டுள்ளேன். இதனால், வருங்காலத்தில் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
மாணவி வர்ஷிதா:
தினமலர் பட்டம் இதழியின் வினாடி வினா போட்டியில் பங்கேற்றது புது அனுபவமாக இருந்தது. இன்றைய போட்டியில் இறுதி சுற்றுக்கு முன்வரை நாங்கள் தான் முன்னிலையில் இருந்தோம். இறுதி சுற்றான 'பசர்' சுற்றில், வெற்றியை தவற விட்டோம். அடுத்த முறை முதல் இடத்தை பிடிப்போம்.
கடந்தாண்டு வரை எனக்கு தமிழ் படிப்பதில் சிரமம் இருந்தது. ஆனால், தற்போது பட்டம் நாளிதழை தினமும் படித்து வருவதால், சரளமாக பேச, படிக்க மற்றும் எழுத முடிகிறது. பொது அறிவும் தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும், போட்டித் தேர்வுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மூன்றாம் இடம் பிடித்த பண்ரூட்டி திருவள்வர் மெட்ரிக் மேல்நிலை மாணவர் ராமச்சந்திரன்:
பட்டம் இதழ் எனக்கு தமிழை சரளமாக படிக்க உதவியது. பல தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது. மூன்று ஆண்டாக முயற்சித்து இந்தமுறை இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளேன். பொது அறிவை வளர்த்துக் கொள்ள மாணவர்கள், பட்டம் இதழை படிக்கவேண்டும்.
மாணவர் மதன்குமார்: தினமலர் பட்டம் மாணவர் இதழை சேர்ந்தவர்களுக்கும், எனது பள்ளி ஆசிரியர்கள், சீனியர்களுக்கும் நன்றி. அவர்களால் தான் இந்த வெற்றி. மூன்றாம் இடம் பிடித்தது மகிழ்ச்சி. பட்டம் இதழில் எனக்கு இயற்பியல் பிரிவு தான் பிடிக்கும். பட்டம் இதழால், பள்ளியில் படிக்கும் பாடங்களை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆசிரியர்கள் பேட்டி:
பட்டத்தில் உலகமே உள்ளது
பட்டம் இதழின் வினாடி வினா நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது. இம்முறை எங்கள் பள்ளி மாணவர்கள் இறுதி போட்டிக்கு செல்ல வில்லை. இருப்பினும், அவர்களுக்கு இந்த போட்டி சிறந்த அனுபவமாக இருந்தது. இதுவே அவர்களுக்கு அடுத்தாண்டு இப்போட்டியில் பங்கேற்க உத்வேகமாக இருக்கும். வினாக்கள் அனைத்தும் வித்யாசமாக இருந்தது. பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் நன்றாக பதில் கூறினர். அடுத்த ஆண்டு எங்கள் பள்ளி மாணவர்கள், இப்போட்டியில் நிச்சயம் வெற்றி பெற நாங்கள் முயற்சிப்போம். பட்டம் இதழ் படிப்பதன் மூலம் மாணவர்கள் புத்தகத்தை தாண்டி நிறைய கற்றுக்கொள்கின்றனர். உலகமே அதில் உள்ளது. உலகத்தை பார்க்க விரும்பும் மாணவர்கள் பட்டம் இதழை படித்தால் போதும்.
சந்தனமரி, ஆசிரியர்,
விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி, லாஸ்பேட்டை, புதுச்சேரி.
போட்டி தேர்வில் பங்கேற்கலாம்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதில் மகிழ்ச்சி. தினமலர் பட்டம் இதழ், எங்கள் பள்ளிக்கும், மாணவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் பள்ளியில் பட்டம் இதழை அனைத்து மாணவர்களும் படிக்கின்றனர். இதுபோன்ற நிகழ்ச்சி, போட்டி தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பெரிதும் உதவும். இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த 'தினமலர்-பட்டம்' இதழுக்கு நன்றி.
சித்திரவேல், ஆசிரியர்,
ஜீவரத்தினம் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளி,
வீராம்பட்டினம்.
எங்கள் பள்ளிக்கு இது மூன்றாவது முறை. கடந்த இருமுறையும் நாங்கள் 2ம் இடம் பிடித்தோம். இப்போது மொபைல் போனால் வீணாகும் இந்த காலத்தில், எங்கள் மாணவர்கள் ஆர்வமுடன் பட்டம் இதழை படித்து, போட்டிக்கு வந்துள்ளனர். பட்டம் இதழ் படிப்பதால், ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றை கற்றுக் கொள்கின்றனர். இதனால், மாணவர்களிடையே படிக்கும் ஆர்வம் கூடிக் கொண்டிருக்கிறது.
முதலில் இரு மாணவர்களுடன் வந்தோம். இன்று நிறைய மாணவர்கள் பங்கேற்க வரத் துவங்கியுள்ளனர். மாணவர்கள் மொபைல் போன் பார்க்காமல் பட்டம் இதழை பார்க்க வைத்த தினமலர் பட்டம் இதழுக்கு நன்றி.
தேவி, ஆசிரியர்,
திருவள்ளுவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பண்ருட்டி.

