/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அடகு கடை உரிமையாளர்கள் நகைகளுடன் தப்பியோட்டம்
/
அடகு கடை உரிமையாளர்கள் நகைகளுடன் தப்பியோட்டம்
ADDED : ஜன 11, 2025 05:12 AM
புதுச்சேரி : முத்தியால்பேட்டை அடகு கடையில், வாடிக்கையாளர்களின் பல லட்சம் மதிப்புள்ள நகையுடன் தப்பியோடிய உரிமையாளர்கள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
முத்தியால்பேட்டை தளவாய் வீராசாமி வீதியில், குடியா (எ) ஜூகன் கிஷோர் மற்றும் திப்புடா (எ) பக்ரத் கிஷோர் ஆகியோர் அடகு கடை நடத்தி வந்தனர்.
இந்த கடையில் சோலை நகரைச் சேர்ந்த லதா, 52, என்பவர் கடந்த 2020ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை 102.4 கிராம் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றார்.
பின், அடகு வைத்த நகைக்கு வட்டி மற்றும் அசல் சேர்ந்து ரூ. 1.14 லட்சம் கட்டியுள்ளார். அப்போது நகைகள் வங்கி, லாக்கரில் இருப்பதாகவும், எடுத்து வந்து விட்டு தகவல் தெரிவிப்பதாகவும் உரிமையாளர்கள் கூறினர்.
ஆனால் சில நாட்கள் கழித்து லதா வட்டிக்கடைக்கு சென்று கேட்டபோது, நாளை தருவதாக கூறி அலைக் கழித்துள்ளனர்.
கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் லதா கடைக்கு சென்று பார்த்து போது, கடைபூட்டி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதேபோல் அதே வட்டிக்கடையில் நகையை அடகு வைத்திருந்த மற்ற நபர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து லதா முத்தியால் பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து அடகு கடை உரிமையாளர்கள் ஜூகன் கிஷோர், பகிரத் கிஷோர் ஆகியோரை தேடி வருகின்றனர்.
முத்தியால்பேட்டை வட்டிக்கடையில் வாடிக்கையாளர்களின் பல லட்சம் மதிப்புள்ள நகைகளை மோசடி செய்துவிட்டு, தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.