UPDATED : அக் 16, 2026 05:41 PM
ADDED : அக் 16, 2026 05:38 PM

அ நிறம் | அளவு
திருபுவனை: திருபுவனை தொகுதி, மதகடிப்பட்டு ஊரல் குளம் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு முதல்வர் ரங்கசாமி இலவச மனை பட்டா வழங்கினார்.
சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., முயற்சியால் புதுச்சேரி நில அளவை பதிவேடுகள் துறையின் சார்பில், சட்டசபையில் இலவச மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் ரங்கசாமி நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 24 குடும்பங்களுக்கு இலவச மனை பட்டாக்களை வழங்கினார். சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., நில அளவை பதிவேடுகள் துறை அலுவலர் விமல் உட்பட பலர் பங்கேற்றனர்.
