தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குழந்தை நல மருத்துவ மாநாடு

 குழந்தை நல மருத்துவ மாநாடு

 குழந்தை நல மருத்துவ மாநாடு


ADDED : பிப் 11, 2026 04:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 04:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், குழந்தை நல மருத்துவத் துறை, இந்திய குழந்தை நல மருத்துவக் கழகம் சார்பில், 18வது கிழக்கு கடற்கரை குழந்தை நல மருத்துவ மாநாடு நடந்தது.

மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி நிறுவனத் தலைவர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணைச் செயலாளர் வேலாயுதம் தலைமை தாங்கினர்.

குழந்தை நலத்துறை தலைவர் பரத்குமார், பேராசிரியர் அருள்குமரன், திருமுருகன், பழனிராஜ், சோமுசுந்தரம் ஆகியோர் மாநாட்டை துவக்கி வைத்தனர். தேசிய குழந்தை நல மருத்துவக் கழகத்தின் தலைவர் சிங்காரவேலு கலந்து கொண்டு, குழந்தைகளின் ஆரோக்கிய பாதுகாப்பில் சமீபத்திய மருத்துவ முன்னேற்றங்கள் குறித்து பேசினார்.

மாநாட்டில் மருத்துவமனை இயக்குநர் காக்னே, டீன்கள் கார்த்திகேயன், சஞ்சய், மருத்துவ கண்காணிப்பாளர் பிரகாஷ், துணை கண்காணிப்பாளர் கிரிஜா, துணை டீன் சவுந்தர்யா உட்பட பலர் பங்கேற்றனர்.

மாநாட்டில், குழந்தைகளில் பொதுவாக காணப்படும் நோய்கள், அவற்றை துல்லியமாக கண்டறியும் நவீன சிகிச்சை முறைகள், நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் குடும்ப அடிப்படையிலான பராமரிப்பு குறித்து பல்வேறு தலைப்புகளில் டாக்டர்கள் விளக்கம் அளித்தனர்.

டாக்டர்கள் பாலசங்கர், நளினி, ஸ்ரீநிவாசன், விஷ்ணுபட், மகாதேவன், சிதம்பரம், தங்கவேல் வாழ்த்தி பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us