/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீன் வலையில் சிக்கிய பெலிக்கான் பறவை மீட்பு
/
மீன் வலையில் சிக்கிய பெலிக்கான் பறவை மீட்பு
ADDED : டிச 13, 2025 05:30 AM

புதுச்சேரி: புதுச்சேரி, ஊசுட்டேரியில், மீன் வலையில் சிக்கி தவித்த பெலிக்கான் பறவையை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்தனர்.
ஊசுட்டேரியில், நேற்று மதியம் பெலிகான் பறவை ஒன்று, மீன் வலையில் சிக்கி தண்ணீரில் தத்தளிப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
வனத்துறை ஊழியர்கள் கண்ணதாசன், வேலாயுதம் ஆகியோர் ஏரியில் மீன் வலையில் சிக்கி தவித்த பெலிக்கான் (கூழக்கடா) பறவையை மீட்டு, மறைமலை அடிகள் சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு வனத்துறை மருத்துவர் குமரன் பறவைக்கு சிகிச்சை அளித்தார்.
ராஜிவ்காந்தி கால்நடை அரசு மருத்துவ கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் உடனிருந்தனர். அதைத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட பெலிக்கான் பறவையை வனத்துறையினர் கொண்டு சென்றனர்.

