தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இ.சி.ஆரில் வாகனங்களுக்கு அபராதம் 

இ.சி.ஆரில் வாகனங்களுக்கு அபராதம் 

இ.சி.ஆரில் வாகனங்களுக்கு அபராதம் 


ADDED : செப் 12, 2026 10:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2026 10:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இ.சி.ஆரில் போக்குவரத்து போலீசாரின் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.  

புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் வெளி மாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இதற்கிடையே, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து, நகரப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வேலய்யன் தலைமையிலான போலீசார் நேற்று இ.சி.ஆர்., சிவாஜி சிலை அருகே திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

 அப்போது, அவ்வழியாக வந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை தடுத்து நிறுத்தி, ஆவணங்களை சோதனை செய்தனர்.

அதில், வாகன உரிமம் மற்றும் இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் சரியாக இல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும்,  அதிவேகமாக வந்த பைக்குகள், கார்களை லேசர்கன் மூலம் கண்காணித்தும் அபராதம் விதிக்கும் பணியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். 

இதில், 100க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us