/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் அபராதம்
/
சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் அபராதம்
ADDED : அக் 27, 2024 04:28 AM
அரியாங்குப்பம் : அரியாங்குப்பத்தில், சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற விட்டால், அபராதம் விதிக்கப்படும் என, ஆணையர் ரமேஷ் எச்சரித்துள்ளார்.
அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட முக்கிய சாலைகளில், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சாலை பகுதியில் கடை வியாபாரிகள் பெயர் பலகை, வியாபார பொருட்களை வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
கடைகளுக்கு பொருட்கள் வாங்கும் வரும் மக்கள் எடுத்து வரும் வானங்களை சாலையில் நிறுத்தி விட்டு செல்வதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
வரும் 7 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு ஆணையர் தெரிவித்துள்ளார்.