ADDED : மார் 16, 2024 05:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பாத்திமா பள்ளி ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
பாத்திமா அரசு நிதி உதவி பெறும் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பள்ளி நிர்வாகம் கட்ட வேண்டிய 5 சதவீத ஓய்வூதிய பங்கு கடந்த 6 மாதம் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து, பள்ளி முன்பு நேற்று ஓய்வூதியதாரர்கள் சங்க செயலாளர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

