தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கோரிக்கைகளை வலியுறுத்தி பென்ஷனர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி பென்ஷனர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி பென்ஷனர் சங்கம் ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 20, 2026 07:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2026 07:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி இ.பி.எப்., பென்ஷனர்கள் நல சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (நவ.,20) நுாறடி சாலையில் இ.பி.எப்., அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்க செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு., மாநில செயலாளர் சீனுவாசன், அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கவுரவ தலைவர் பிரேமதாசன், தலைவர் ரவிச்சந்திரன், புதுச்சேரி ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் நடராஜன், நிர்வாகிகள் சுப்ரமணி, ராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் இ.பி.எப்., பென்ஷனர்களுக்கு பஞ்சபடி வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ., திட்டத்தில் இலவச மருத்துவ சிகிச்சை, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரயில் கட்டண சலுகைகளை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இறுதியில் இ.பி.எப்., தலைமை அதிகாரியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us