/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இலவச அரிசி தரமில்லாததால் காரைக்காலில் மக்கள் ஆவேசம்
/
இலவச அரிசி தரமில்லாததால் காரைக்காலில் மக்கள் ஆவேசம்
இலவச அரிசி தரமில்லாததால் காரைக்காலில் மக்கள் ஆவேசம்
இலவச அரிசி தரமில்லாததால் காரைக்காலில் மக்கள் ஆவேசம்
ADDED : நவ 06, 2024 07:23 AM
காரைக்கால் : காரைக்காலில் வழங்கிய இலவச அரிசி தரமின்றி வழங்கியதை கண்டித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
தீபாவளி பண்டிகைக்காக ரேஷன் கார்டுதாரர்களுக்கு 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கும் திட்டத்தை கடந்த 21ம் தேதி முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். அதனடிப்படையில், காரைக்காலில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் திருநள்ளாறு தொகுதி பேட்டை கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் வழங்கிய இலவச அரிசி, மழையில் நனைந்து கட்டி பிடித்திருந்ததால், அதனை வாங்க மறுத்து ரேஷன் கடை ஊழியர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டினர்.
தகவலறிந்த குடிமைப்பொருள் வழங்கல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்க விரைந்து சென்று, கட்டி பிடித்த அரிசியை மாற்றி, தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுத்தனர்.
இதேபோல், கோட்டுச்சேரி, திருப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் வழங்கிய மழையில் நனைந்த அரிசி அதிகாரிகள் உத்தரவினால் மாற்றித்தரப்பட்டது.
25 டன் அரிசி ரிட்டன்
இந்நிலையில், நேற்று முன்தினம் புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறைக்கு 350 டன் அரசி வந்தது. அதனை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், பழுப்பு நிறத்தில் இருந்த 25 டன் அரிசியை திருப்பி அனுப்பினர்.

