தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ படகு குழாமில் குவிந்த மக்கள்: போக்குவரத்து நெரிசல்

படகு குழாமில் குவிந்த மக்கள்: போக்குவரத்து நெரிசல்

படகு குழாமில் குவிந்த மக்கள்: போக்குவரத்து நெரிசல்


ADDED : நவ 04, 2024 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2024 05:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம், : தொடர் விடுமுறையால், நோணாங்குப்பம் படகு குழாமில், சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடலுார் சாலையில், நோணாங்குப்பம் படகு குழாம் உள்ளது. வெளியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் குவிந்து விடுவர்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகை எனதொடர்ந்து விடுமுறையால், வெளி மாநிலத்தில் இருந்து படகு குழாமிற்கு சுற்றுலா பயணிகள் காரில், படையெடுத்து வந்தனர்.

கூட்டம் அலைமோதியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.

சுற்றுலாப் பயணிகள் எடுத்து வந்த, கார்கள், படகு குழாம், கார் நிறுத்தும் இடத்தில் நிறுத்த இடமில்லாததால், பழைய நோணாங்குப்பம் ஆற்று பாலம், கடலுார் சாலை பகுதியில் நிறுத்தி விட்டு சென்றனர். இதனால், கடலுார் சாலையில் நேற்று காலையில் இருந்து மாலை வரை, போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us