தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பல்மைரா கடற்கரையில் குவிந்த மக்கள்

 பல்மைரா கடற்கரையில் குவிந்த மக்கள்

 பல்மைரா கடற்கரையில் குவிந்த மக்கள்


ADDED : ஜன 18, 2026 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2026 06:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: பாகூர் பகுதியில் காணும் பொங்கலை முன்னிட்டு, முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாளான நேற்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. பாகூர் அடுத்த அரங்கனுார் எரமுடி ஐயனார் கோவில், மணப்பட்டு - மூ.புதுக்குப்பம் பல்மைரா கடற்கரை, பனித்திட்டு, நரம்பை கடற்கரையில் ஏராளமான பொது மக்கள் குடும்பத்துடன் திரண்டு நேற்று காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.

போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கிருமாம்பாக்கம் போலீசார் மற்றும் மூ.புதுக்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்த பேரிடர் மீட்பு குழுவினர், கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டு, கடலில் குளித்த பொது மக்களை கரைக்கு கொண்டு வந்து விட்டு, எச்சரித்து அனுப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us