/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
3 பேரிடம் ரூ. 1.15 லட்சம் 'அபேஸ்'
/
3 பேரிடம் ரூ. 1.15 லட்சம் 'அபேஸ்'
ADDED : ஜன 18, 2026 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பிச்சவீரன்பேட்டை சேர்ந்த நபர், தனியார் வங்கியின் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வந்தார்.இந்நிலையில், மர்ம நபர் ஆன்லைன் மூலம் அவரது கிரெடிட் கார்டில் இருந்து 74 ஆயிரத்து 770 ரூபாயை எடுத்தார். இதேபோல் அபிஷேகபாக்கத்தை சேர்ந்த நபர் 20 ஆயிரம் ரூபாய், புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்த நபர் 21 ஆயிரம் ரூபாய் என, மொத்தம் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 770 ரூபாயை ஆன்லைன் மோசடியில் இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து ஆன்லைன் மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.

