தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கிருஷ்ணா நகர் மக்கள் ஊழியர்களிடம் வாக்குவாதம்

கிருஷ்ணா நகர் மக்கள் ஊழியர்களிடம் வாக்குவாதம்

கிருஷ்ணா நகர் மக்கள் ஊழியர்களிடம் வாக்குவாதம்


UPDATED : அக் 27, 2026 04:41 AM

ADDED : அக் 26, 2026 08:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 04:41 AM ADDED : அக் 26, 2026 08:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வீடுகளில் மழைநீர் சூழ்துள்ளதால் கிருஷ்ணா நகர் 12வது குறுக்கு தெரு விரிவாக்கம் குடியிருக்கும் மக்கள் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.

புதுச்சேரியில் கனமழை பெய்ததை அடுத்து நகர பகுதி முழுதும் மழைநீரில் தத்தளித்தது. தாழ்வான பகுதியில் தேங்கிய மழைநீர் மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.

காமராஜர் நகர் தொகுதி, கிருஷ்ணா நகர் பகுதியில் நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதி தாழ்வான பகுதி என்பதால் வீடுகளை சுற்றி மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. அதில், கிருஷ்ணா நகர் 12வது குறுக்கு தெரு, விரிவாக்கம் பகுதி மிக தாழ்வாக இருப்பதால், சாலை அமைக்க குடியிருப்பவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கனமழையால், சாலை மற்றும் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி நிற்பதால், வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மழைநீரை வெளியேற்ற நேற்று உழவர்கரை நகராட்சி மூலம் மோட்டார் பம்புகள் கொண்டுவரப்பட்டது. சாலை அமைக்காமல் மழை காலத்தில் வந்து என்ன பயன் என ஆத்திரத்தில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us