UPDATED : அக் 27, 2026 04:38 AM
ADDED : அக் 26, 2026 08:56 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி.அக்.27-: உழவர்கரை தொகுதி பாரிஸ் நகரில் புதிய டிரான்ஸ்பார்மரை நாராயணசாமி எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
உழவர்கரை தொகுதிக்குட்பட்ட பாரிஸ் நகர், ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நாராயணசாமி எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து புதிதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மரை நாராயணசாமி எம்.எல்.ஏ., இன்று (அக்.,26) துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மின் துறை அதிகாரிகள், என்.ஆர்.காங்., நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
