sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 ஸ்கூட்டியில் வலம் வரும் தேவதாசை தொகுதி மக்கள் எளிதாக சந்திக்கலாம் காங்., தலைவர் வைத்திலிங்கம் 'சர்ட்டிபிகேட்'

/

 ஸ்கூட்டியில் வலம் வரும் தேவதாசை தொகுதி மக்கள் எளிதாக சந்திக்கலாம் காங்., தலைவர் வைத்திலிங்கம் 'சர்ட்டிபிகேட்'

 ஸ்கூட்டியில் வலம் வரும் தேவதாசை தொகுதி மக்கள் எளிதாக சந்திக்கலாம் காங்., தலைவர் வைத்திலிங்கம் 'சர்ட்டிபிகேட்'

 ஸ்கூட்டியில் வலம் வரும் தேவதாசை தொகுதி மக்கள் எளிதாக சந்திக்கலாம் காங்., தலைவர் வைத்திலிங்கம் 'சர்ட்டிபிகேட்'


ADDED : பிப் 20, 2026 05:23 AM

Google News

ADDED : பிப் 20, 2026 05:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: காமராஜ் நகர் தொகுதி காங்., நிர்வாகிகள் மற்றும்செயல் வீரர்கள் தேர்தல் ஆலோசனை கூட்டம் ஜெயராம் ஓட்டலில் நடந்தது.

காமராஜ் நகர் தொகுதி பொறுப்பாளர் தேவதாஸ் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், தொகுதி தேர்தல் பொருப்பாளர்கள்,கட்சியின் அனைத்து பிரிவு மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள், செயல் தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு, மாநில தலைவர் வைத்திலிங்கம் தலைமை தாங்கி, பேசியதாவது:

காமராஜ் நகரில் இலவசமாக உணவளிப்பது போல் பணத்தை வைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து இருக்கிறார். வந்தவுடன் ரங்கசாமியை திட்டினார். அடுத்து பா.ஜ.,வை திட்டினார். தற்போது பா.ஜ., மற்றும் ரங்கசாமி காலில் விழுந்தார். நேற்று அவரது அம்மா அ.தி.மு.க.,வில் இணைந்து இருக்கிறார். இதுபோல் குழப்பத்தை ஏற்படுத்துவதே, இந்த பணக்காரர்கள் தான்.

இவர்கள் பணத்தை வைத்துக்கொண்டு போட்டியிட முடியாது. மக்களுக்கு சேவை செய்தால் மட்டுமே போட்டியிட முடியும்.சாப்பாடு போடுவதை நிறுத்தமாட்டார்கள் என, ஜான்குமார் சொன்னார். அரியாங்குப்பம், நெட்டப்பாக்கம் இடங்களில் சாப்பாடு போடுவதை நிறுத்தி விட்டனர். காமராஜர் நகர் தொகுதியில் எப்போது நிறுத்துவர் என தெரியவில்லை. இவர்கள் நிலை இல்லாதவர்கள். காங்., பொறுப்பாளர் தேவதாஸ் ஸ்கூட்டியில் எளிதாக செல்ல கூடியவர், சாதாரணமாக அணுக முடியும்.பிரதமர் மோடி வரும் 1ம் தேதி வந்து என்ன கொடுக்க போகிறார் என தெரியாது. தேர்தலுக்கு பின் அனைத்தும் சுவிட்ச் ஆப் ஆன மாதிரி ஆகிவிடும்.

அவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள். ஓட்டு போட்டால் உன்னையும் சேர்த்து விற்று விடுவார். ஜான்குமார் ஒன்று, இரண்டு என தொகுதிகளாக விற்று கொண்டே வருகிறார். நம்மிடம் ஓட்டு வாங்கி நம்மை வியாபார பொருளாக மாற்றுகிறார். நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது புதுச்சேரிக்கே நல்லது.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us