/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீஸ் நிலையத்தை தேடும் பொதுமக்கள் அரியாங்குப்பத்தில் அவலம்
/
போலீஸ் நிலையத்தை தேடும் பொதுமக்கள் அரியாங்குப்பத்தில் அவலம்
போலீஸ் நிலையத்தை தேடும் பொதுமக்கள் அரியாங்குப்பத்தில் அவலம்
போலீஸ் நிலையத்தை தேடும் பொதுமக்கள் அரியாங்குப்பத்தில் அவலம்
ADDED : மார் 05, 2024 04:49 AM

அரியாங்குப்பம்: போலீஸ் நிலையத்தில் இடிந்து விழுந்த சுவர், பெயர் பலகை மீண்டும் அமைக்காததால், புகார் கொடுக்க வரும் மக்கள் அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தை தேடி அலைகின்றனர்.
புதுச்சேரி வளர்ந்து வரும் சுற்றுலா தளம். நாட்டின் பல பகுதியில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்குள்ள நோணாங்குப்பம் படகு குழாம், சின்ன வீராம்பட்டினம் கடற்கரைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக புதுச்சேரியில் கூப்பிடும் துாரத்தில் அருகருகே போலீஸ் நிலையங்கள் உள்ளது.
திருட்டு, வழிப்பறியில் பாதிக்கப்படும் மக்கள், சுற்றுலா பயணிகள் உடனடியாக ஓடி வருவது போலீஸ் நிலையத்திற்கு தான்.
புதுச்சேரி கடலுார் சாலையில் அரியாங்குப்பத்தில் போலீஸ் நிலையம் உள்ளது. ஆனால், போலீஸ் நிலையம் எங்கு உள்ளது என்பதை கண்டுபிடிப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.
இந்த போலீஸ் நிலையம் மதில் சுவர் மற்றும் பெயர் பலகை கடந்த வடிகால் வாய்க்கால் கட்டுமான பணியின்போது இடிந்து விழுந்தது. இதுவரை சுவரும் கட்டவில்லை, போலீஸ் நிலையம் என்பதிற்கான பெயர் பலகையும் அமைக்கவில்லை. இதனால் நகை, பணத்தை கண்டுபிடிக்க புகார் தர வரும் பொதுமக்கள், அரியாங்குப்பம் போலீஸ் நிலையம் எங்குள்ளது என்பதை கண்டுபிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

