UPDATED : அக் 24, 2026 01:22 AM
ADDED : அக் 24, 2026 01:18 AM
புதுச்சேரி: கோரிமேடு ஜிப்மர் எதிரே உள்ள நடைமேம்பாலம் இயங்கததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
புதுச்சேரி கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனை எதிரே சாலையை கடந்து செல்வதை தவிர்க்க தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் 2 கோடி ரூபாய் மதிப்பில் நவீன நடைமேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
ஜிப்மருக்குத் தினசரி வந்து செல்லும் மக்கள், கர்ப்பிணிகள் மற்றும் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் பாதுகாப்பாக சாலையைக் கடப்பதற்காகப் படிக்கட்டுகளுடன், இந்த லிப்ட் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேம்பாலத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக லிப்ட் கடந்த இரண்டு நாட்களாக இயங்காமல் முடங்கியுள்ளது. மேம்பால படிகட்டுகளில் ஏற முடியாதவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வேறு வழியின்றி ஆபத்தான முறையில் மக்கள் சாலையைக் கடக்கும் நிலைக்குத் மீண்டும் தள்ளப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கான நிதி செலவில் அமைக்கப்பட்டுள்ள நடை மேம்பால லிப்ட்டை உடனடியாகச் சரி செய்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.
