ADDED : அக் 24, 2026 01:18 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடத்தில் ‘வனபுரி வாத்துக்காரன்’ நாடகம் நேற்று அரங்கேற்றப்பட்டது. பல்கலைக்கூட யாழ் நாடக ஆராய்ச்சி மையம் மற்றும் பெங்களூரு அடவி நாடக குழு இணைந்து நடத்திய நிகழ்ச்சியில், கல்லுாரி முதல்வர் போஸ் வரவேற்றார்.
உதவிப்பேராசிரியர் அருணகிரி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். விரிவுரையாளர் டிரெனாவகாரசோ மேடை வடிவமைப்பை செய்திருந்தார். சிறப்பு விருந்தினராக, அமைச்சர் ராஜவேலு, அய்யப்பன் எம்.எல்.ஏ., அரசு செயலர் சுரேந்தர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், பேராசிரியர்கள் சுப்பையா, மாமலைவாசன் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் விசித்ரா நன்றி கூறினார்.
