தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அரியாங்குப்பம் சாலையில் பெயர்ந்து கிடக்கும் ஜல்லிகளால் மக்கள் அவதி

அரியாங்குப்பம் சாலையில் பெயர்ந்து கிடக்கும் ஜல்லிகளால் மக்கள் அவதி

அரியாங்குப்பம் சாலையில் பெயர்ந்து கிடக்கும் ஜல்லிகளால் மக்கள் அவதி


UPDATED : அக் 13, 2026 04:29 PM

ADDED : அக் 13, 2026 04:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 04:29 PM ADDED : அக் 13, 2026 04:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் சாலையில் பெயர்ந்து கிடக்கும் ஜல்லிகளால் பொதுமக்கள் தினந்தோறும் அவதியடைந்து வருகின்றனர்.

அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட சொர்ணா நகரில் சாலை வசதி கோரி பொதுமக்கள் கடந்த ஆட்சியில் இருந்த பாஸ்கர் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர். அதையடுத்து, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தார் சாலை அமைக்க பூஜை போடப்பட்டது. அதன் பிறகு, சட்டசபை தேர்தல் வந்ததால், அந்த பணி கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு மேல், சொர்ணா நகர் மற்றும் குறுக்கு தெருக்களில் ஜல்லிகள் கொட்டப்பட்டது. ஆனால் தார் சாலை அமைக்காமல் ஜல்லிகள் பெயர்ந்து சாலையில் ஆங்காங்கே சிதறி கிடப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

பெரிய அளவில் ஜல்லிகள் கிடப்பதால், பள்ளி, மாணவர்கள், பொதுமக்கள் தினந்தோறும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தார் ஊற்றி சாலை அமைக்கும் பணியை, உடனடியாக துவக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us