/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுனாமி குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி மக்கள் அவதி
/
சுனாமி குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி மக்கள் அவதி
சுனாமி குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி மக்கள் அவதி
சுனாமி குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி மக்கள் அவதி
ADDED : அக் 22, 2025 11:02 PM
அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பில், மழைநீர் புகுந்ததால், மக்கள் கடும் அவதியடைந்தனர்.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக, புதுச்சேரியில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டி தீர்த்தது.
அதையடுத்து, வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் வீட்டுக்குள் புகுந்தது. தகவலறிந்த, தொகுதி எம்.எல்.ஏ., பாஸ்கர் நேரில் பார்வையிட்டார்.
அவரது முயற்சியில், கொம்யூன் பஞ்சாயத்து ஜே.சி.பி.,யை வரவழைத்து, அங்கு தேங்கிய மழை நீரை அகற்றும் பணி நடந்தது. தொடர்ந்து, வீராம்பட்டினம் சாலை, காக்கையாந்தோப்பு, பவானி நகர் போன்ற நகர் பகுதியில், மழைநீர் அகற்றப்பட்டது. அரியாங்குப்பம் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்காமல் செல்ல துார் வாரும் பணி நடந்தது.