/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாலிபருக்கு வெட்டு 4 பேர் மீது வழக்கு
/
வாலிபருக்கு வெட்டு 4 பேர் மீது வழக்கு
ADDED : அக் 22, 2025 11:02 PM
புதுச்சேரி: வாலிபரை கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முருங்கப்பாக்கம், வில்லியனுார் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் கல்பனா மகன் பவித்ரன், 18. இவர் தனது நண்பர் யுகேஷ் என்பவருடன் நேற்று முன்தினம் மாலை பைக்கில் பால் வாங்க மெயின் ரோட்டிற்கு சென்றார்.
அப்போது வேல்ராம்பட்டைச் சேர்ந்த தினேஷ், 18; மாசிலாமணி, 18; கீரப்பாளையம் ராகேஷ், 18, மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் என நான்கு பேர் முன்விரோதத்தில் பவித்ரனை தாக்கி, கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து பவித்ரன் தாய் கொடுத்த புகாரின் பேரில், தினேஷ் உட்பட 4 பேர் மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

