/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஹெலிபேடு மைதானத்தில் வாங்கிங் செல்லும் மக்கள் அச்சம்: சாலையில் கிரிக்கெட் விளையாட மாவட்ட நிர்வாகம் தடை விதிக்குமா
/
ஹெலிபேடு மைதானத்தில் வாங்கிங் செல்லும் மக்கள் அச்சம்: சாலையில் கிரிக்கெட் விளையாட மாவட்ட நிர்வாகம் தடை விதிக்குமா
ஹெலிபேடு மைதானத்தில் வாங்கிங் செல்லும் மக்கள் அச்சம்: சாலையில் கிரிக்கெட் விளையாட மாவட்ட நிர்வாகம் தடை விதிக்குமா
ஹெலிபேடு மைதானத்தில் வாங்கிங் செல்லும் மக்கள் அச்சம்: சாலையில் கிரிக்கெட் விளையாட மாவட்ட நிர்வாகம் தடை விதிக்குமா
ADDED : ஜூலை 07, 2025 01:35 AM
புதுச்சேரி: ெஹலிபேடு மைதான சாலைகளை ஆக்கிரமித்து இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை தலைதுாக்கியுள்ளது.இங்கு, கிரிக்கெட் விளையாடும் அணிகளை ஒழுங்குப்படுத்த டி.ஜி.பி., காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்.
ைஹமாஸ் விளக்கு அமைக்கப்பட்ட பிறகு லாஸ்பேட்டை மைதானம் புதுபொலிவு பெற்றுள்ளது. தினமும் காலையிலும், மாலையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாக்கிங், உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர்.
பொதுமக்கள் வாக்கிங் செல்லுவதற்கு வசதிக்காக ெஹலிபேடு மைதானத்தில் புத்தம் புது சாலைகள் போடப்பட்டுள்ளது. இருப்பினும், இப்போது சாலையை முழுவதும் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள் ஆக்கிரமித்து கொள்கின்றனர். சாலையின் நடுவில் ஸ்டம்புகளை நட்டு மணிக்கணக்கில் கிரிக்கெட் விளையாடுகின்றனர். குறிப்பாக வாரவிடுமுறை நாட்களில் ெஹலிபேடு மைதானத்தின் உட்புற சாலைகள் அனைத்துமே பொதுமக்கள் நடக்க முடியாதப்படி கிரிக்கெட் போட்டி ஆக்கிரமித்து கொள்கின்றது. இதனால் சாலைகளில் வாங்கிங் செல்ல முடியாமல் பொதுமக்கள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
வேகமாக வரும் பந்துகளை கண்டு முதியோர்கள் ஒதுங்கும்போது நிலை தடுமாறியும் விழுந்து படுகாயத்துடன் செல்லுகின்றனர். பொதுமக்கள் மீதும் அசுரவேகத்தில் பந்துகள் படுகின்றன. அதனை தட்டிகேட்கும்போது கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களுக்கும், வாங்கிங் செல்லுவோர்களுக்கு இடையே தினமும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகின்றது.
இதனால் ெஹலிபேடு மைதானத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையும் தலைதுாக்கியுள்ளது. வாக்குவாதம் முற்றி, கொலைகள் நடக்கவும் வாய்ப்புள்ளது. ெஹலிபேடு மைதான உட்புற சாலைகளை முழுவதுமாக ஆக்கிரமித்து இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதால் அச்சத்துடன் அப்பகுதியில் பொதுமக்கள் கடந்து செல்லுகின்றனர்.
ெஹலிபேடு சாலைகளை தவிர்த்து மற்ற இடங்களில் கிரிக்கெட் விளையாட விசாலமான இடம் உள்ளது. தாகூர் கலைக்கல்லுாரி மைதானத்தில் கிரிக்கெட் விளையாட இடம் உள்ளது. இங்கு இளைஞர்கள் தாராளமான கிரிக்கெட் விளையாட செய்யலாம்.
எனவே மைதானம் முழுவதும் கிரிக்கெட் விளையாடும் அணிகளை கணக்கெடுத்து பொதுமக்களை பாதிக்காத வகையில் கிரிக்கெட் விளையாட செய்ய வேண்டும். ெஹலிபேடு மைதானத்தின் அனைத்து சாலைகளிலும் கிரிக்கெட் விளையாட மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் கிரிக்கெட் விளையாடுவதை ஒழுங்குப்படுத்த காவல் துறைக்கு டி.ஜி.பி., உத்தரவிட வேண்டும். சாலைகள் என்பது விளையாடுவதற்கு அல்ல என்பதை கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களும் உணர்ந்து, காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.