/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ.,வை மக்கள் விரட்டியடிப்பார்கள் ரவிக்குமார் எம்.பி., பேட்டி
/
பா.ஜ.,வை மக்கள் விரட்டியடிப்பார்கள் ரவிக்குமார் எம்.பி., பேட்டி
பா.ஜ.,வை மக்கள் விரட்டியடிப்பார்கள் ரவிக்குமார் எம்.பி., பேட்டி
பா.ஜ.,வை மக்கள் விரட்டியடிப்பார்கள் ரவிக்குமார் எம்.பி., பேட்டி
ADDED : மார் 16, 2024 05:36 AM
மரக்காணம்: விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வி.சி., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ரவிக்குமார் எம்.பி., நிருபர்களிடம் கூறுகையில், 'கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றுவதற்கு இல்லாத கம்பெனிகளை உருவாக்கி தேர்தல் பத்திரங்கள் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய்களை மத்திய அரசு தன்னுடைய பா.ஜ., விற்கு நன்கொடையாக பெற்றுள்ளது.
இந்த மெகா ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும். இல்லையென்றால், இந்த பொதுத் தேர்தலில் இந்திய மக்கள் பா.ஜ.,வை விரட்டியடிப்பார்கள்.
புல்வாமா தாக்குதல் நடந்த சில தினங்களிலேயே பாகிஸ்தான் நிறுவனத்திடமிருந்து தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெற்றுள்ளது. தேசபக்தி என்ற பெயரில் அதை வியாபாரமாக்கி இன்றைக்கு பணம் ஈட்டுகின்ற கட்சியாக உள்ளது.
குடியுரிமை திருத்த சட்டம் மூலம் இந்தியா முழுவதும் திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது.
தி.மு.க., கூட்டணியில் வி.சி., கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சிதம்பரத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில் நான் மீண்டும் போட்டியிட உள்ளேன். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்' என்றார்.

