/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மக்கள் நீதிமன்றம்; 5 வழக்குகளுக்கு தீர்வு
/
மக்கள் நீதிமன்றம்; 5 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : மார் 30, 2025 03:26 AM

புதுச்சேரி : புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில், 5 வழக்குகள் முடிக்கப்பட்டு, 4 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் முறையீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது.
புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில், மக்கள் நீதிமன்றம் நடந்தது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவர் முத்துவேல் தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் சுவிதா, ஆறுமுகம் ஆகியோர் அடங்கிய அமர்வு பங்கேற்று மக்கள் நீதி மன்றத்தை நடத்தியது. இதில், மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்திலிருந்து 10 வழக்குகள் சமாதானத்திற்கானது என கண்டறியப்பட்டு, பேச்சு வார்த்தைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையின் மூலம், 5 வழக்குகளில் உடன்படிக்கை ஏற்பட்டு தீர்வு காணப்பட்டது. இந்த மக்கள் நீதிமன்ற நிகழ்வின் மூலம் 4 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் முறையீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், வழக்கறிஞர் சங்க தலைவர் ரமேஷ், பொதுச் செயலாளர் நாராயணகுமார், பொருளாளர் ராஜபிரகாஷ், வழக்கறிஞர்கள் இளஞ்செழியன், விமல், ரவிக்குமார், சுப்ரமணி, ராமநாதன், வடிவேல், செல்வக்குமார், பிரதாபன், புதுச்சேரி சட்ட கல்லுாரி மாணவர்களும், 50க்கும் மேற்பட்ட வழக்காளிகள், காப்பீட்டு நிறுவனம், பொதுத்துறை வங்கி அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுளை, நுகர்வோர் குறை தீர்வு ஆணைய பதிவாளர் விஜயா ரவிந்திரன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.