ADDED : ஜூலை 05, 2026 03:24 AM

அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த மக்கள் மன்றத்தில் பொதுமக்களின் குறைகளை எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன் கேட்டறிந்தார்.
உருளையன்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் சீனியர் எஸ்.பி., கலைவாணன் தலைமையில் நடந்த மக்கள் மன்றத்தில், பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அதே போன்று அரியாங்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன் மக்கள் கொடுத்த புகார் மனு மீது விசாரணை நடத்தினார்.
ரெட்டியார்பாளையம், கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலையம், ஏனாம் புறக்காவல் நிலையம், மாகி போலீஸ் ஸ்டேஷனில் மக்கள் மன்றம் நடந்தது. இதில், எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர். பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக கொடுத்த புகார் மனுகள் மீது விசாரணை நடத்தப்பட்டது.
