/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சைபர் கிரைமில் மக்கள் மன்றம் 15 மொபைல் போன்கள் ஒப்படைப்பு
/
சைபர் கிரைமில் மக்கள் மன்றம் 15 மொபைல் போன்கள் ஒப்படைப்பு
சைபர் கிரைமில் மக்கள் மன்றம் 15 மொபைல் போன்கள் ஒப்படைப்பு
சைபர் கிரைமில் மக்கள் மன்றம் 15 மொபைல் போன்கள் ஒப்படைப்பு
ADDED : அக் 25, 2025 11:11 PM

புதுச்சேரி: புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் தலைமையில் மக்கள் மன்ற நிகழ்ச்சி நடந்தது.
இன்ஸ்பெக்டர் தியாகராஜன் உள்ளிட்ட போலீசார் பங்கேற்றனர். பொதுமக்கள் அளித்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சீனியர் எஸ்.பி., இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டார். மேலும், பொதுமக்கள் தவறவிட்ட ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 15 மொபைல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் கூறுகையில், 'பெண்கள் சமூக வலைத்தளங்களில் தங்களின் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் முன், அத்தகைய வலைத்தளங்களின் பாதுகாப்பு அம்சங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலமாக அதிக பணம் சம்பாதிக்க பகுதி நேர வேலை வாய்ப்புகள் வழங்குகிறோம் என ஆசை வார்த்தைகள் கூறினால் அதை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். உங்கள் வங்கி கணக்கு சஸ்பெண்ட் செய்வதாக கூறி வாட்ஸ் ஆப் மூலமாக ஏதேனும் லிங்க் மற்றும் ஆப் மெசேஜ் வந்தால் அதனை கிளிக் செய்ய கூடாது.
ஆப் மூலம் உடனடி கடன் மற்றும் குறைந்த வட்டியில் லோன் தருவதாக கூறி, உங்கள் போட்டோக்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டினால், அதனை நம்பி யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.
மேலும், சைபர் கிரைம் சம்பந்தமாக புகார்கள் மற்றும் சந்தேகங்கள் இருந்தால் 1930 மற்றும் 0413-2276144, 9489205246 மற்றும் cybercell-police@py.gov.in தொடர்பு கொள்ளவும்' என்றார்.

