/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராஜ்பவன் தொகுதி வட்டார காங்., கூட்டம்
/
ராஜ்பவன் தொகுதி வட்டார காங்., கூட்டம்
ADDED : அக் 25, 2025 11:11 PM

புதுச்சேரி: ஓட்டு திருட்டு குறித்து, ராஜ்பவன் தொகுதி வட்டார காங்., கமிட்டி கூட்டம் காங்., தலைமை அலுவலகத்தில் நடந்தது.
காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., தலைமை தாங்கினார். அகில இந்திய காங்., கமிட்டி மேலிட பார்வையாளர்கள் கிரிஷ் ஜோடங்கர், சூரஜ் ஹெக்டே ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், புதுச்சேரி காங்., சட்டசபை குழுத் தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாள், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், ராஜ்பவன் வட்டார காங்., கமிட்டி பொறுப்பாளர் வழக்கறிஞர் மருது பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பிரதிஷ் இருதயராஜ் ஓட்டு திருட்டு குறித்த கையெழுத்து இயக்கம் துரிதமாக செயல்பட வேண்டியது குறித்தும், தேர்தல் துறையால் மேற்கொள்ள உள்ள சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தும் பணியில் ஓட்டுச் சாவடி நிலை முகவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

