தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மக்கள் மன்றம் நிகழ்ச்சி  எஸ்.பி., சுருதி பங்கேற்பு

மக்கள் மன்றம் நிகழ்ச்சி  எஸ்.பி., சுருதி பங்கேற்பு

மக்கள் மன்றம் நிகழ்ச்சி  எஸ்.பி., சுருதி பங்கேற்பு


ADDED : செப் 14, 2025 01:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2025 01:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி எஸ்.பி., சுருதி தலைமையில் நேற்று நடந்தது.

இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். இதில், 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சைபர் கிரைம் தொடர்பான புகார்களை தெரிவித்தனர்.பொது மக்கள் தவறவிட்ட ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான10 மொபைல் போன்கள்கண்டுபிடிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், எஸ்.பி., சுருதி கூறுகையில்,'சமூக வலைதளங்களில் யாரேனும் உங்களிடம் பணம் தருவதாக கூறி வங்கி கணக்குகள் மற்றும் சிம் கார்டு கேட்டால் அதனை நம்பி கொடுக்கக் கூடாது. வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம்; பகுதி நேர வேலை வாய்ப்புகள் வழங்குவதாக ஆசை வார்த்தை கூறினால், அதைநம்பியாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.

வாட்ஸ் ஆப், டெலிகிராம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாக பழகி விலை உயந்த பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறினால் நம்ப வேண்டும். அறிமுகமில்லாத நபர்கள் பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம்போன்றவற்றின் மூலம்வீடியோ கால் அழைப்பு வந்தால் பதில் அளிக்க வேண்டாம்.

உங்கள் வங்கி கணக்கு சஸ்பெண்ட் செய்வதாக கூறி, வாட்ஸ் ஆப் மூலமாக ஏதேனும் லிங்க் மற்றும் ஆப் மெசேஜ் வந்தால் அதனை கிளிக் செய்யாதீர்.மேலும், சைபர் குற்றம் சம்பந்தமாக புகார் கொடுக்க 1930 மற்றும் 0413-2276144, 9489205246 மற்றும் cybercell-police@py.gov.in தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us