/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மக்கள் மன்றம் : சீனியர் எஸ்.பி., பங்கேற்பு
/
மக்கள் மன்றம் : சீனியர் எஸ்.பி., பங்கேற்பு
ADDED : மார் 24, 2025 04:20 AM

பாகூர்: கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நடந்த மக்கள் மன்ற நிகழ்ச்சியில், புதுச்சேரி சீனியர் எஸ்.பி., கலைவாணன் பங்கேற்று, பொது மக்களிடம் குறைகளை கேடறிந்தார்.
புதுச்சேரியில் உள்ள போலீஸ் நிலையங்களில் சனிக்கிழமை தோறும் மக்கள் மன்ற நிகழ்ச்சியின் மூலமாக பொது மக்களிடம் குறைகள் கேட்கப்பட்டு தீர்க்கப்பட்டு வருகிறது. அதன்படி, கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் மக்கள் மன்றம் என்ற குறை கேட்பு நிகழ்ச்சி நடந்தது. கூட்டத்தில், தெற்கு பகுதி எஸ்.பி., பக்தவச்சலம் வரவேற்றார். புதுச்சேரி போலீஸ் சீனியர் எஸ்.பி., கலைவாணன் பங்கேற்று, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
அதில், உடனடியாக தீர்க்கப்பட கூடிய பிரச்னைகளை சரி செய்திட போலீசாருக்கு உத்தரவிட்டார். மற்ற பிரச்சனைகளை சட்ட ரீதியாக அனுகுவது குறித்து ஆலோசனைகளை வழங்கினார். இந்த குறை கேட்பு கூட்டத்தின் மூலமாக 21 புகார்கள் பெறப்பட்டு, அதில் 12 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பாகூர், கிருமாம்பாக்கம், கரையாம்புத்துார், அரியாங்குப்பம், தவளக்குப்பம் உள்ளிட்ட காவல் நிலைய அதிகாரிகள் பங்கேற்றனர்.