/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மக்கள் முன்னேற்றக் கழகம் 3ம் ஆண்டு தொடக்க விழா
/
மக்கள் முன்னேற்றக் கழகம் 3ம் ஆண்டு தொடக்க விழா
ADDED : நவ 01, 2025 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழா, புதுச்சேரி மாநில விடுதலை நாள் விழாவையொட்டி, இன்று காலை 10:00 மணிக்கு கீழுரில், அக்கட்சி தலைவர் ராமதாஸ் தேசியக் கொடி மற்றும் கட்சி கொடி ஏற்றி வைக்கிறார்.
மாலை 3:00 மணிக்கு நோணாங்குப்பம் பேரடைஸ் போட் ஹவுஸ் எதிரில் விஷால் பெவிலியன் ரெசிடென்சியில் 3ம் ஆண்டு தொடக்க விழா நடக்கிறது. பேராசிரியர் ராமதாஸ் தலைமை தாங்குகிறார்.
நேரு எம்.எல்.ஏ., அ.தி.மு.க., உரிமை பாதுகாப்புக்குழு பொதுச் செயலாளர் ஓம் சக்தி சேகர், விக்னேஷ் கண்ணன், மாநில என்.ஆர். இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

