/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி விடுதலை நாள் கவர்னர், முதல்வர் வாழ்த்து
/
புதுச்சேரி விடுதலை நாள் கவர்னர், முதல்வர் வாழ்த்து
புதுச்சேரி விடுதலை நாள் கவர்னர், முதல்வர் வாழ்த்து
புதுச்சேரி விடுதலை நாள் கவர்னர், முதல்வர் வாழ்த்து
ADDED : நவ 01, 2025 02:11 AM
புதுச்சேரி: புதுச்சேரி விடுதலை நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு கவர்னர், முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கவர்னர் கைலாஷ்நா தன் வாழ்த்து செய்தியில், 'மாநிலத்தின் விடுதலைக்காக பாடுபட்ட, விடுதலை போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவில் கொண்டு, அவர்கள் வழிநின்று சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவக் கொள்கைகளை நிலைநிறுத்த வேண்டும் என, தெரிவித்துள்ளார்.
முதல்வர் ரங்கசாமி வாழ்த்து செய்தியில், மாநிலத்தின் விடுதலைக்காக நம் முன்னோர்கள் செய்த தியாகம், போராட்டம் மற்றும் உறுதியை, நாம் இன்று பெருமையுடன் நினைவு கூறுகிறோம். இன்றைய தலைமுறை அந்த விடுதலை உணர்வை மனதில் கொண்டு, நமது மாநிலத்தின் வளர்ச்சி, சமுக ஒற்றுமை, நலனுக்காக உறுதியுடன் செயல்பட வேண்டும் என, தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ ஜெயக்குமார், திருமுருகன், ஜான்குமார், எதிர்க்கட்சி தலைவர் சிவா, காங்., தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன், அ.தி.மு.க., உரிமை மீட்டு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர், இந்திய கம்யூ மாநில செயலாளர் சலீம், நமது மக்கள் கழக தலைவர் நேரு, மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் கொடி ஏற்றுகிறார்
கடற்கரை சாலை, காந்தி திடலில் இன்று காலை 8:30 மணிக்கு நடைபெறும் விடுதலை நாள் விழாவில், முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து, போலீஸ் அணி வகுப்பு மரியாதையை ஏற்கிறார். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

