/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்காலில் கிரிக்கெட் போட்டி பேரளம் அணிக்கு முதல் பரிசு
/
காரைக்காலில் கிரிக்கெட் போட்டி பேரளம் அணிக்கு முதல் பரிசு
காரைக்காலில் கிரிக்கெட் போட்டி பேரளம் அணிக்கு முதல் பரிசு
காரைக்காலில் கிரிக்கெட் போட்டி பேரளம் அணிக்கு முதல் பரிசு
ADDED : மே 15, 2025 02:25 AM

காரைக்கால்: காரைக்காலில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற பேரளம் அணி முதல் பரிசை வென்றது.
காரைக்கால் அடுத்த மேலகாசாகுடி கிராமத்தில் உள்ள 'ஸ்டீரிட் ஸ்டிக்கர்ஸ்' அணி சார்பில் கிரிக்கெட் போட்டி நடந்தது. இப்போட்டியில், காரைக்கால், நெடுங்காடு, மேலகாசாகுடி, பச்சூர் மற்றும் தமிழக பேரளம் உள்ளிட்ட 52 அணிகள் பங்கேற்றன. போட்டியை சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
இப்போட்டியில், பேரளம் அணி முதல் பரிசையும், மேலகாசாகுடி அணி 2ம் பரிசையும், பச்சூர் அணி மூன்றாம் பரிசையும் வென்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு, முறையே ரூ.15 ஆயிரம், 12 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசை வழங்கினார்.