sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

30 நாட்களுக்குள் தொழில் துவங்க அனுமதி புதுச்சேரி தொழில் வணிகத் துறை அசத்தல்

/

30 நாட்களுக்குள் தொழில் துவங்க அனுமதி புதுச்சேரி தொழில் வணிகத் துறை அசத்தல்

30 நாட்களுக்குள் தொழில் துவங்க அனுமதி புதுச்சேரி தொழில் வணிகத் துறை அசத்தல்

30 நாட்களுக்குள் தொழில் துவங்க அனுமதி புதுச்சேரி தொழில் வணிகத் துறை அசத்தல்


ADDED : அக் 11, 2024 06:05 AM

Google News

ADDED : அக் 11, 2024 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி மாநிலத்தில் தற்போது 77 பெரிய தொழிற்சாலைகள், 191 நடுத்தர தொழிற்சாலைகள், 7872 சிறுதொழிற்சாலைகள், 1157 குறு தொழிற்சாலைகள் என,மொத்தம் 9307 தொழிற்சாலைகள் உள்ளன. இதில் 15,873 கோடி அளவிற்கு ஆண்டிற்கு உற்பத்தி நடந்து வருகிறது. மாநிலத்தில் மேலும் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளை கொண்டு வேலைவாய்ப்பினை கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக புதுச்சேரி மாநிலத்தில் தொழில் துவங்குவதற்கான நடைமுறைகளை அரசு எளிமைப்படுத்தியுள்ளது.

அதிக அளவில் வெளி நாடு, வெளிமாநில முதலீடுகளை ஈர்க்கும் வகையில் துறை ரீதியான உரிமங்கள், தடையில்லா சான்றிதழ்கள் பெறுவதற்காக வழிமுறைகளை புதுச்சேரி தொழில் மற்றும் வணிகத் துறை சுலபமாக்கியுள்ளது. ஒவ்வொரு துறைக்கும் கால அளவு நிர்ணயிக்கப்பட்டு, ஒற்றை சாளர முறையில் தொழில் துவங்க விண்ணப்பம் வரவேற்று வருகிறது.

அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் புதுச்சேரியில் தொழில் துவங்க அதிகபட்சம் 30 நாட்களுக்குள் அனுமதி பெற்றுவிட முடியும். இதற்காக தொழில் வணிகத் துறை தொழில்முறை வழிகாட்டி குழுமத்தினை ஏற்படுத்தியுள்ளது.

துறைகள் அனுமதி


புதுச்சேரி தொழில் துவங்க நினைக்கும் முதலீட்டாளர்கள், தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை மாவட்டத் தொழில் மையத்தில் செயல்படும் இந்த தொழில்முறை வழிகாட்டி குழுமத்தினை நேரில் அணுகி விண்ணப்பித்தால் போதும். தொழில் அனுமதிக்கான விண்ணப்பம் தடையில்லா சான்றிதழ் பெறுவது எளிதாகிவிடும்.

அங்கிருந்து பல்வேறு துறைகளில் தடையில்லா சான்றிதழ் பெற அதிக பட்சம் 3 நாட்களுக்குள்அனுப்பப்பட்டு விடும். தொழில் வழிகாட்டு குழுமத்தில் இருந்து பொதுவாக தொழிற்சாலைகள் விதியின் கீழ் அனுமதி பெற தொழிற்சாலை மற்றும் கொதிகலன் தலைமை ஆய்வகத்திற்கும், சுற்றுச்சூழல் மாசு, அனுமதி பெற அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கும், மனை அனுமதி பெற நகர மற்றும் கிராம அமைப்பு துறைக்கும், கட்டட வரைப்பட ஒப்புதல் பெற புதுச்சேரி பி.பி.ஏ.,திட்ட குழுமத்திற்கும், நிலப்பயன்பாடு மாற்றதிற்கான அனுமதி பெற,நகர மற்றும் கிராமப்பு அமைப்பு துறையின் நிலப்பயன்பாடு மாற்று குழுவிற்கும், நிலம் கையகப்படுத்தலில் இருந்து விலக்கு பெற வருவாய் துறைக்கும், பொது ஆட்சேபனை அனுமதி பெற நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்திற்கும் தடையில்லா சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் பிரித்து அனுப்பப்படும்.

ஒவ்வொரு வாரம்


பின், தொழில் வழிகாட்டு குழுமம் ஒவ்வொரு வாரமும் இத்துறை அதிகாரிகளை நேரில் வரவழைத்து, தடையில்லா சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த, விண்ணப்பத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன,என்ன குறைபாடு உள்ளது என்று நேரடியாக விசாரணை நடத்தும். ஏதேனும் குறைபாடு, இணைக்க வேண்டிய ஆவணங்கள் இருந்தால் உடனடியாக, முதலீட்டாளர்களுக்கு தெரியப்படுத்தப்படும். இந்த ஆவணங்களை இணைத்தால், உடனடியாக தொழில் துவங்க அனுமதி கிடைத்துவிடும்.

ஆவணங்கள்


தொழில் துவங்க நினைக்கும் முதலீட்டார்கள், பொது விண்ணப்பத்துடன், பதிவு செய்யப்பட்ட நில ஆவணம், குத்தகை ஒப்பந்த நகல்கள், மனை அல்லது கட்டட புளு பிரிண்ட், செயல்முறை விபரங்களுடன் விளக்கப்படம் மற்றும் மாசுபாடு விவரங்கள், கூட்டு உடன்படிக்கை பத்திரம், குறிப்பாணை விதிகள்,கையொப்பமிடும் நபரை அங்கீகரிக்கும் தீர்மானம், கட்டடத்தின் வரைப்பட அனுமதி, மின்சார பயன்பாடு ரசீது, படிவம் 1சி மற்றும் செலுத்தும் சீட்டு, காலிமனையாக இருந்தால் எப்.எம்.பி.,ஸ்கெட்ச் ஆகியவற்றை தயாராக வைத்து கொண்டு விண்ணப்பிப்பது காலதாமதத்தை தவிர்க்கலாம்.

மின்சார பயன்பாடு


மின்சார பயன்பாடு இல்லாத தொழிற்சாலைகளாக இருந்தால் தொழில் துவங்குவதற்கான பொது விண்ணப்பம் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்திற்கும், அறிவியல் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் துறையின் அனுமதி மட்டுமே பெற வேண்டும்.மின்சார பயன்பாடு உள்ள தொழிற்சாலைகளை தொழிற்பேட்டையில் அமைப்பதாக இருந்தால், தொழில் அனுமதிக்கான பொதுவிண்ணப்பம் தொழிற்சாலை, கொதிகலன்களின் தலைமை ஆய்வகம், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்திற்கும், அறிவியல் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் துறை என மூன்று துறையின்அனுமதி பெற வேண்டும்.

மின்சார பயன்பாடு உள்ள தொழிற்சாலைகளை அடையாளம் காணப்பட்ட இடங்கள், அல்லது மற்ற இடங்களாக இருந்தால், 6 துறைகள் வரை அனுமதி பெற வேண்டி இருக்கும்.

தொழிற்பேட்டை


புதுச்சேரியில் சேதராப்பட்டு கரசூர் பகுதியில் 800 ஏக்கர் நிலம்,காரைக்கால் போலகத்தில் 600 ஏக்கர் நிலம்,மேட்டுப்பாளையத்தில் ஐ.டி.,பூங்கா அமைக்க 25 ஏக்கர் நிலயத்தினை பிப்டிக் தயாராக வைத்துள்ளது. எனவே புதுச்சேரியில் தொழில் துவங்க மற்ற மாநிலங்களை காட்டிலும் சாதகமான சூழல் உள்ளது. தண்ணீர், மின்சாரம் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு பிரச்னை இல்லை.

புதுச்சேரி அரசு சுற்றுச்சூழலை பாதிக்காத தண்ணீரை அதிகம் உறிஞ்சாத தொழிற்சாலைகளை வரவேற்கிறது.

மேலும் விபரங்களுக்கு புதுச்சேரி தட்டாஞ்சாவடிதொழில் மற்றும் வணிகத் துறை இயக்குனரை நேரில் அணுகலாம். இல்லையெனில் 0413-2248476, ind.pon@nic.in,https://industry.py.gov.in என்ற மொபைல் எண், இ-மெயில், இணைதள முகவரியை தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us