/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுவர்களுக்கு ஆளுமை மேம்பாட்டு பயிற்சி
/
சிறுவர்களுக்கு ஆளுமை மேம்பாட்டு பயிற்சி
ADDED : அக் 27, 2024 03:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : சிறுவர்கள் மேம்பாட்டு அமைப்பின் சார்பில், சிறுவர்களுக்கான ஆளுமை மேம்பாட்டு, பயிற்சி முகாம் நடந்தது.
புதுச்சேரி, ஈஸ்வரன் கோவில் வீதியில் நடந்த முகாமில், நிறுவனர் நாகேஷ் தலைமை தாங்கினார். புதுச்சேரி சிறுவர் நலக்குழு முன்னாள் உறுப்பினர் இளம்பரிதி, சிறுவர்கள் வளர்த்து கொள்ள வேண்டிய தன்னம்பிக்கை, நேர் மறை எண்ணங்கள், சுயக்கட்டுப்பாடு மற்றும் திறன் மேம்பாடு குறித்து சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில், சிறுவர்கள் மேம்பாட்டு அமைப்பின் உறுப்பினர்கள், பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.