/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு 29ம் தேதி ஆளுமை தேர்வு
/
சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு 29ம் தேதி ஆளுமை தேர்வு
ADDED : ஆக 27, 2025 06:56 AM
புதுச்சேரி: பதவி உயர்வு அடிப்படையில் நிரப்பப்பட உள்ள சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான ஆளுமை தேர்வு வரும் 29ம் தேதி நடக்கிறது.
புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 26 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் பதவி உயர்வு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
இதற்கு தகுதியான 32 உதவி சப் இன்ஸ்பெக்டர்கள், 151 ஏட்டுகள் என மொத்தம் 183 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அவர்களுக்கு துறை ரீதியிலான தேர்வுகள் கடந்த 22ம் தேதி நடந்தது.
அதில், தேர்ச்சி பெற்ற 30 உதவி சப் இன்ஸ்பெக்டர்கள், 48 ஏட்டுகளுக்கு வரும் 29ம் தேதி கோரிமேடு ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் காலை 7:30 மணிக்கு ஆளுமை தேர்வு, அணி வகுப்பு தேர்வு நடக்கிறது.
தேர்வில் சீருடையுடன் கலந்து கொள்ள வேண்டும். அழைப்பாணையை எடுத்து வர வேண்டும். முறைகேடு செய்தால் துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீஸ் தலைமையக எஸ்.பி., சுப ம்கோஷ் தெரிவித்துள்ளார்.