sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்கு கூடுதல் உதவித்தொகை கோரி மனு

 அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்கு கூடுதல் உதவித்தொகை கோரி மனு

 அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்கு கூடுதல் உதவித்தொகை கோரி மனு


ADDED : பிப் 05, 2026 05:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 05:58 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அறிவுசார் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகையை கூடுதலாக வழங்க வேண்டும் என, அறிவுசார் குறைபாடு உடையவர்களின் பெற்றோர்கள் அமைப்பு, முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளது.

அமைப்பின் தலைவர் ஷீலா தலைமையில், செயலாளர் கண்ணன், நிர்வாகி ஆயிஷா உள்ளிட்டோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.

அதில், சமூக நலத்துறை மூலம் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் குறைபாட்டின் சதவீத அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அறிவுசார் குறைபாடுகள் (மனவளர்ச்சி, மூளை முடக்கு வாதம்) உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவஉதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.இந்த உதவித்தொகை சதவீத அடிப்படையில் தான் வழங்கப்படுகிறது. இதில், அறிவுசார் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் சுயமாக செயல்பட இயலாத சூழ்நிலையில் உள்ளதால், இவர்களுக்கான மருத்துவ செலவினங்கள் அதிகமாக உள்ளதால், உதவித்தொகையை மருத்துவ சதவீத அடிப்படையில் இல்லாமல், அதிபட்சமாகவும், மாத உதவித்தொகையினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us