/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாதாள சாக்கடை அமைக்க கோரி மனு
/
பாதாள சாக்கடை அமைக்க கோரி மனு
ADDED : பிப் 05, 2026 05:56 AM

புதுச்சேரி: காமராஜ் நகர் தொகுதி, சாமிபிள்ளைத்தோட்டம் பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் தடுப்புச் சுவர் அமைத்து தரக் கோரி,காங்., தொகுதி பொறுப்பாளர் தேவதாஸ் தலைமை பொறியாளரிடம் மனு அளித்தார்.
காமராஜ் நகர் தொகுதி, சாமிபிள்ளைதோட்டம், பகுதியில், பாதாள சாக்கடை மற்றும் தடுப்புச் சுவர் இல்லாததால் அப்பகுதியில் மக்கள் தொடர் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.மழைக்காலங்களில் தண்ணீர் ஊருக்குள் வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் காங்., தொகுதி பொறுப்பாளர் தேவதாஸ்சை சந்தித்து முறையிட்டனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட காங்., தொகுதி பொறுப்பாளர் தேவதாஸ், அதனை உடனடியாக அமைத்துதர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வத்திடம் கோரிக்கை மனு அளித்தார்.
காமராஜ் நகர்தொகுதி வட்டார தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

