/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் கோரி மனு
/
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் கோரி மனு
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் கோரி மனு
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் கோரி மனு
ADDED : அக் 24, 2025 03:07 AM

புதுச்சேரி: அரியாங்குப்பம் தொகுதியில் கனமழையை எதிர்கொள்ள தொகுதியில் போர்கால நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அ.தி.மு.க., மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்., ஆணையரிடம் மனு வழங்கினார்.
புதுச்சேரியில் பெய்த கனமழையால் அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட காக்காயந்தோப்பு அபிராமி நகர், வீராம்பட்டினம்சுனாமி குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதிப்படுகின்றனர்.
தகவலறிந்த அ.தி.மு.க., மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நிர்வாகிகளுடன் அந்த பகுதிகளை பார்வையிட்டார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்., ஆணையர் (பொ) நாகராஜன், பொறியாளர் சுரேஷ் ஆகியோரிடம் வரும் கனமழையையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்கு வாய்க்கால் அனைத்தையும் துார்வார வேண்டும். மழைநீர் தடையின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும். நீர் வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்ய கோரி, மனு அளித்தார்.

