/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எஸ்.ஐ.,யை சஸ்பெண்ட் செய்யக் கோரி மனு
/
எஸ்.ஐ.,யை சஸ்பெண்ட் செய்யக் கோரி மனு
ADDED : ஜூலை 04, 2025 02:19 AM

புதுச்சேரி: போலீஸ் ஸ்டேஷனில் பெண்ணை துன்புறுத்திய, சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை சஸ்பெண்ட் செய்யக் கோரி டி.ஜி.பி.,யிடம் மனு அளித்தனர்.
தவளக்குப்பம் அருகே தனியார் ஓட்டல் அறையில், நகை காணாமல் போனது தொடர்பாக, அங்கு வேலை பார்த்த, பூரணாங்குப்பத்தை சேர்ந்த கலையரசி, என்பவரை, தவளக்குப்பம் போலீசார் அழைத்து, சென்று விசாரித்தனர்.
அவதர போலீசார் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டி, பல்வேறு அமைப் பினர் போராட்டம் நடத்தினர்.
அதையடுத்து, தவளக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் சண்முக சத்தியா, 2 போலீசார் மற்றும் ஒரு பெண் போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இடமாற்றம் செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேரையும் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புதுச்சேரி சமூக ஆர்வலர் அன்பழகி தலைமையில், பெண்கள், டி.ஜி.பி., ஷாலினிசிங் யிடம் நேற்று மனு அளித்தனர்.