/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பேனர்களை அகற்ற இ.கம்யூ., கலெக்டரிடம் மனு
/
பேனர்களை அகற்ற இ.கம்யூ., கலெக்டரிடம் மனு
ADDED : ஜூலை 19, 2025 02:52 AM

புதுச்சேரி :புதுச்சேரியில் அத்துமீறி வைக்கப்படும் பேனர்களை தடை செய்யக்கோரி, இ.கம்யூ.,மாநில செயலாளர் சலீம் கலெக்டர் குலோத்துங்கனிடம் மனு வழங்கினார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரியில் பொது இடங்களில் அரசியல் கட்சிகள், சங்கங்கள் அமைத்துள்ள கொடிக் கம்பங்களை அகற்ற உயர்நீதிமன்றம் மதுரை கிளை, தனி நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில், புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகங்கள் அவசரகதியில் கொடிக்கம்பங்களை அகற்றி உள்ளன. இதில் அதிகளவில் இ.கம்யூ., கட்சி மற்றும் தொழிற்சங்க அமைப்புகளின் கொடிக்கம்பங்கள் ஆகும்.
ஏழை, எளிய மக்களுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டு அரசியல் அமைப்புகள், சங்கங்கள், மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் கொடிக்கம்பங்களை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் வரும் 16.8.2025 வரை கொடிக்கம்பங்கள் அகற்றும் உத்தரவை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. ஆகையால் கொடி கம்பங்கள் அகற்றும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்.
சட்டத்துக்கு புறம்பாக தனி நபர்கள், அமைப்புகள் மூலம் வைக்கப்பட்டுள்ள தேவையற்ற பேனர்களை சட்டப்படி அகற்றிட ஆவண செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இ.கம்யூ., நிர்வாகிகள் சேது செல்வம், தினேஷ் பொன்னையா ஆகியோர் உடனிருந்தனர்.