/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெட்ரோல் பங்க் ஊழியர் மின்சாரம் தாக்கி பலி
/
பெட்ரோல் பங்க் ஊழியர் மின்சாரம் தாக்கி பலி
ADDED : ஆக 21, 2024 04:08 AM
பாகூர் : முள்ளோடையில் பெட்ரோல் பங்கில் ஊழியர் மின்சாரம் தாக்கி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலுார் அடுத்த பில்லாலி, வரக்கால்பட்டு பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பட்டாபிராமன் 65; முள்ளோடையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் சூப்பர் வைசிங் மேனேஜர்.
நேற்று முன்தினம் காலை காற்று அடிக்கும் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. பட்டாபிராமன் அதனை சரி செய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். பங்க் ஊழியர்கள் அவரை மீட்டு கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
டாக்டர் பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். பங்க் ஊழியர் தனஞ்செயன் அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.