sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை ரூ.2 உயர்கிறது வாட் வரியை மாற்றியமைக்க கவர்னர் ஒப்புதல்

/

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை ரூ.2 உயர்கிறது வாட் வரியை மாற்றியமைக்க கவர்னர் ஒப்புதல்

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை ரூ.2 உயர்கிறது வாட் வரியை மாற்றியமைக்க கவர்னர் ஒப்புதல்

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை ரூ.2 உயர்கிறது வாட் வரியை மாற்றியமைக்க கவர்னர் ஒப்புதல்


ADDED : டிச 29, 2024 05:24 AM

Google News

ADDED : டிச 29, 2024 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் புத்தாண்டு முதல் பெட்ரோல், டீசல் விலை 2 ரூபாய் வரை உயர்கிறது.

புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியை (வாட்) வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

வாட் வரியை உயர்த்த கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் புத்தாண்டு முதல் புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை 2 ரூபாய் வரை உயர்கிறது.

பெட்ரோல் விலை:


தற்போது, புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.94.26, காரைக்காலில் 94.03, மாகேவில் 91.92, ஏனாமில் 94.92 ஆக உள்ளது.

வாட் உயர்வு மூலம் புதுச்சேரியில் பெட்ரோல் விலை ரூ.96.26, காரைக்கால்- 96.03, மாகே-93.92, ஏனாம்-96.92 ஆக விலை அதிகரிக்கிறது.

பிற மாநில ஒப்பீடு


பெட்ரோலை பொருத்தவரை புதுச்சேரியும் கடலுாரை ஒப்பிடும்போதும் ரூ. 8.54, விலை வித்தியாசம் உள்ளது. வாட் அதிகரிப்பினால் இந்த வித்தியாசம் ரூ.6.54 ஆக குறைகிறது.

காரைக்காலை நாகப்பட்டினத்துடன் ஒப்பிடும் போதும் ரூ.8.22 பெட்ரோல் விலை வித்தயாசம் உள்ளது. வாட் அதிகரிப்பினால் இது 6.22 ரூபாயாக குறையும். இதே மாகே பிராந்தியத்தை ஆந்திரா கண்ணுாருடன் ஒப்பிடும்போது, ரூ.13.86 உள்ளது.

இந்த வித்தியாசம் தற் போது ரூ.11.86 ஆக குறையும். ஏனாம் பிராந்தியத்தை காக்கிநாடாவுடன் ஒப்பிடும்போது பெட்ரோல் விலை வித்தியாசம் ரூ.15.16 ஆக உள்ளது. வாட் அதிகரிப்பினால் இந்த விலை வித்தியாசம் 13.16 ஆக குறையும்.

டீசல் விலை


தற்போது டீசல் விலை புதுச்சேரியில் ரூ.84.48, காரைக்காலில் 84.31, மாகேவில் 81.90, ஏனாமில் ரூ.84.75 ஆக உள்ளது. வாட் வரி உயர்வால் டீசல் விலையும் ரூ.2 வரை அதிகரிக்கிறது.

வாட் அதிகரிப்பினால் புத்தாண்டு முதல் டீசல் விலை புதுச்சேரி - ரூ.86.48, காரைக்கால் - ரூ.86.31, மாகே - ரூ.83.90, ஏனாம் - ரூ.86.75 ஆக அதிகரிக்கிறது.

பிற மாநில ஒப்பீடு


டீசலை பொருத்தவரை, புதுச்சேரிக்கு கடலுாருக்கும் ரூ.9.91 ரூபாய் வித்தியாசம் உள்ளது.

வாட் அதிகரிப்பினால் இந்த வித்தியாசம் ரூ.7.91 ஆக குறைகின்றது. காரைக்காலை நாகபட்டினத்துடன் ஒப்பிடும்போது, டீசல் விலை ரூ.9.54 வித்தியாசம் உள்ள சூழ்நிலையில் இது 7.54 ஆக குறைகிறது.

மாகேவை கண்ணுாருடன் ஒப்பீடும்போது ரூ.12.88 வித்தியாசம் உள்ளது. வாட் உயர்வால் இந்த வித்தியாசம் ரூ.10.88 ஆக குறையும்.

ஏனாம் பிராந்தியத்துடன் காக்கிநாடாவை ஒப்பிடும்போது டீசல் விலை ரூ.13.09 வித்தியாசம் உள்ள சூழ்நிலையில் இனி, ரூ.11.09 ஆக குறையும்.

புதுச்சேரி அரசின் வருவாயை உயர்த்தும் நோக்கில் இந்த வாட் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு புதுச்சேரி மக்களுக்கு அரசு அளித்துள்ள புத்தாண்டு பரிசு என எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

உயர்த்தினாலும் விலை குறைவு தான்

புதுச்சேரியில் பெட்ரோல், டீல் மீதான வாட் வரி உயர்த்தப்பட்போதிலும், பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இன்னும் குறைவு தான். பெட்ரோல் விலை பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, ரூ.6.22 முதல் ரூ.13.16 வரையிலும், டீசல் விலை ரூ.7.54 முதல் ரூ.11.09 வரையிலும் குறைவாக தான் இருக்கின்றது.








      Dinamalar
      Follow us