/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெட்ரோல் பங்க் ஊழியர் மயங்கி விழுந்து சாவு
/
பெட்ரோல் பங்க் ஊழியர் மயங்கி விழுந்து சாவு
ADDED : பிப் 03, 2024 07:40 AM
பாகூர் : கிருமாம்பாக்கம் அடுத்த பள்ளக்கொரவள்ளிமேடு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி 54; முள்ளோடையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் ஊழியர்.
நேற்று முன்தினம் மாலை சத்தியமூர்த்தி, தான் குடியிருந்து வரும் வீட்டை காலி செய்து விட்டு, வேறு ஒரு வீட்டிற்கு பொருட்களை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தார். திடீரென அவர் வீட்டு வாசலில் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். அவரது மனைவி தமிழ்வேணி அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் உதவி சப் இன்ஸ்பெக்டர் லுார்துநாதன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

