/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் ஆய்வக தர சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்

ADDED : ஜன 06, 2026 04:08 AM
புதுச்சேரி: மருந்து உற்பத்தி நிறுவனங்கள், ஆய்வக தர சான்றிதழை, சமர்ப்பிக்க வேண்டும் என, புதுச்சேரி மாநில மருந்து வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின், தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ரமேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு;
புதுச்சேரி மாநில மருந்து கட்டுப்பாட்டு துறையில் இருந்து புதுச்சேரியில் உள்ள மொத்த மற்றும் சில்லறை மருந்தகங்களில் இருப்பில் உள்ள மற்றும் இனிவரும் மருந்துகளின் ஒவ்வொரு தொகுப்புகளின் ஆய்வக தர அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதனை ஏற்று, புதுச்சேரி மாநில மருந்து வணிகள் சங்கத்தின் சார்பில், மருந்து உற்பத்தி நிறுவனங்கள், மின்னஞ்சல் மூலமாக, ஆய்வக தர சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.இனிவரும் காலங்களில், ஒவ்வொரு மருந்துகளின் நம்பகத்தன்மை, இத்தகைய ஆய்வக தர சான்றிதழ் வாயிலாக உறுதிப்படுத்தப்படும். எனவே வாடிக்கையாளர்கள் எவ்வித அச்சமில்லாமல், வழக்கம்போல், மருந்துகளை வாங்கி உட்கொள்ளலாம். என தெரித்துள்ளனர்.